டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி
லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சமாஜவாதி வேட்பாளரும் அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் தனக்கு ரூ. 15.5 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ், கட்சியின் மூத்த தலைவர்களான சிவபால் சிங் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்.
டிம்பிள் தனது வேட்பு மனுவில் தனக்குச் சொந்தமாக ரூ. 10.44 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் ரூ. 5.10 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவோ கடந்த 2022இல் மெயின்புரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவர் அறிவித்த சொத்து மதிப்பு ரூ. 14 கோடியாக இருந்தது.
டிம்பிள் தனது வேட்பு மனுவில் தெரிவித்த தகலின்படி, அகிலேஷ் யாதவுக்கு சொந்தமாக ரூ. 9.12 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் ரூ. 17.22 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இருவரின் ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 27.66 கோடியாகும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.