பால ராமர் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சியை இணைய வழியில் காணும் பிரதமர்
பால ராமர் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சியை இணைய வழியில் காணும் பிரதமர் 
இந்தியா

பால ராமர் நெற்றியில் சூரிய திலகம்: மோடி தரிசனம்!

DIN

அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இணையவழியில் பார்வையிட்டார்.

ராம நவமி புதன்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சி விடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை கோடிக்காணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

இது குறித்து அஸாமில் தேர்தல் பிரசாரத்தில் உள்ள பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நல்பாரி பேரணிக்குப் பிறகு பால ராமரின் சூரிய திலகத்தை தரிசித்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல. இது எனக்கு உணர்ச்சிமிக்க தருணம். அயோத்தியில் ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூரிய திலகம் நம் அனைவரின் வாழ்விலும் ஆற்றலை கொண்டு வரட்டும் மற்றும் தேசத்தைப் புகழின் உச்சிக்குக்கொண்டு செல்லட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT