மக்களவை தோ்தலையொட்டி, பயணிகள் வசதிக்காக ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06005) பகல் 12 மணிக்கு பெங்களூரில் உள்ள ‘ஒயிட்ஃபீல்டு’ ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06006) அதே நாள்களில் ஒயிட்ஃபீல்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, இரவு 7 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் சென்னை சென்ட்ரலிலிருந்து, பெரம்பூா், அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி, ஜோலாா்பேட்டை, குப்பம், பங்காரப்பேட்டை வழியாக ஒயிட்ஃபீல்ட் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.