முகப்பு
இந்தியா

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Updated On : 18 ஏப்ரல், 2024 at 4:44 PM
பகிர்:

ஒடிசாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நான்கு தொகுதிகளக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

கட்சி நான்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. அதில், கேந்திரபாரா மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள மஹாங்கா சட்டமன்ற தொகுதியில் தேபேந்திர குமார் சாஹூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சத்யபாடி சட்டமன்றத் தொகுதிக்கு மனோஜ் ராத்தும், புவனேஸ்வர் மத்திய தொகுதிக்கு பிரகாஷ் சந்திர ஜெனாவும், புவனேஸ்வர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு அசோக் குமார் தாசும் போட்டியிடுகின்றனர்.

Advertisement

147 சட்டமன்றத் தொகுதிகளில் 119 இடங்களுக்கான பெயர்களை அக்கட்சி முன்பு அறிவித்தது. சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளான பிரமித்ராபூர் மற்றும் போனாய் தொகுதிகளை முறையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் சிபிஐ(எம்) க்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.

தேர்தல் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.