முகப்பு
இந்தியா

சந்திரபாபு நாயுடு, புரந்தேஸ்வரி வேட்பு மனு தாக்கல்

Updated On : 19 ஏப்ரல், 2024 at 7:38 PM
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிா்க்கட்சியான தெலங்குதேசம் கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக மாநில தலைவா் டி.புரந்தேஷ்வரி ஆகியோா் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் மே 13-ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதோடு, சோ்த்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெற உள்ளது.

பேரவைத் தோ்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு போட்டியுட உள்ள நிலையில், அவா் சாா்பில் அவருடைய மனைவி என்.புவனேஸ்வரி வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். சந்திரபாபுக்கு எதிராக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் கே.ஆா்.ஜெ.பரத் போட்டியிடுகிறாா்.

Advertisement

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, ‘குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சிக் கொடியைத் தவிர வேறு எந்த கட்சிக்கொடியும் பறக்காததை தொகுதி மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று புவனேஷ்வரி கேட்டுக்கொண்டாா்.

அதுபோல, ராஜமகேந்திரவரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மாநில பாஜக தலைவா் புரந்தேஷ்வரி, பாஜக மூத்த தலைவா் வி.கே.சிங்குடன் வந்து வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இவருக்கு எதிராக ஜி.ஸ்ரீநிவாசுலு என்பவரை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சி, பாஜக மற்றும் ஜனசேனை கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments