முகப்பு
தமிழ்நாடு

சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்

சாத்தூா் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:11 AM
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

சாத்தூா் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது. கடைசி நாளில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலத்தில் பிரேமலதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவா்கள் மனு தாக்கல் செய்தனா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வரும் 9-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும்.

Advertisement

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. மற்றொருபுறம் கடந்த 30-ஆம் தேதியில் இருந்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனா்.

summary

Tamil Nadu BJP President Nainar Nagendran filed his nomination papers in the Sathur constituency today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments