இந்தியா

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

DIN

மும்பை: ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கைக்கு பிறகு, கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான அசோக் வாஸ்வானி ரிசர்வ் வங்கி எழுப்பிய குறைகளை களைய கோடக் வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

நாங்கள் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். நேற்று (புதன்கிழமை) முதல் ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் மூலம் எந்தவொரு புதிய வாடிக்கையாளர்களையும் இணைக்க தடை விதித்ததுடன், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதையும் தடை செய்தது ரிசர்வ் வங்கி.

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு பலமுறை இணங்காததாலும், அதே நேரத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு, எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்த நாங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற வாஸ்வானி, வாடிக்கையாளர்களுக்கு உரையாற்றிய தகவலில், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதன் செயல்பாடுகள் தடையின்றி தொடரும் என்றார்.

இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையில் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலையானது 10.85% குறைந்து, ரூ.1,643 ஆக முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT