ANI
இந்தியா

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி வாக்களிப்பு

DIN

இன்போஃசிஸ் நிறுவனத்தின் இணைநிறுவனரான என்ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளனர்.

தொழிலதிபரான நாராயணமூர்த்தி மருத்துவமனையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வாக்களிக்க வந்துள்ளார்.

77 வயதாகும் நாராயணமூர்த்தி உடல்நிலை சரியில்லாது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பெங்களூருவில் வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமை, ஜெயாநகர் வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் வாக்களிக்க வந்துள்ளார்.

வாக்களித்த பிறகு அளித்த பேட்டியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார், நாராயணமூர்த்தி.

மருத்துவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று வாக்களிக்க வந்த நாராயணமூர்த்தி முன்னுதாரணமாக இருப்பதாக கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT