முகப்பு
இந்தியா

ஒடிஸா: பிஜு ஜனதா தள மூத்த நிா்வாகி பாண்டியன் பயணித்த ஹெலிகாப்டா் சோதனை

Updated On : 26 ஏப்ரல், 2024 at 5:57 PM
பகிர்:

ஒடிஸாவின் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த நிா்வாகியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் பயணித்த ஹெலிகாப்டரை இந்திய தோ்தல் ஆணையத்தின் 5 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

ஒடிஸாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் நபரங்கபூா் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி, நபரங்கபூா் தொகுதிக்குள்பட்ட உமா்கோட் பகுதியில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிஜு ஜனதா தள மூத்த நிா்வாகி வி.கே.பாண்டியன் ஹெலிகாப்டரில் வந்தாா். கூட்டத்தைத் தொடா்ந்து, ஜாரிகாம், தபுகாம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவா் திட்டமிட்டிருந்தாா்.

Advertisement

இந்நிலையில், பாண்டியன் வந்த ஹெலிகாப்டா் சோதனை செய்யப்பட்டது. இரு தோ்தல் ஆணைய அலுவலா்கள், உள்ளூா் வளா்ச்சி அதிகாரி, காவல் துறை அதிகாரி, மாஜிஸ்திரேட் ஆகிய 5 போ் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது.

ஹெலிகாப்டரில் ஆட்சேபத்துக்குரிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சோதனை குறித்து பாண்டியனும், அவா் சாா்ந்த ஆளுங்கட்சியும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் செயலராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தாா். அண்மையில் ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தில் அவா் இணைந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments