இந்தியா

வயநாடு நிலச்சரிவு: ஃபகத் ஃபாசில், நஸ்ரியா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி!

வயநாடு நிலச்சரிவுக்கு ஃபகத் ஃபாசில், நஸ்ரியா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

DIN

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ. 25 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 250 க்கும் மேற்பட்டோராக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன. இதே போல இந்தியாவின் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் அவரது மனைவி நஸ்ரியா இருவரும் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டு மக்களுக்காக கனத்த இதயத்துடன் உங்களுக்கு எழுதுகிறோம். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மீட்புக் குழுக்களுடன் இணைந்து நமது அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டக்கூடியவை.

மக்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக உள்ளது. மேலும், இந்த சவாலான நேரத்தில் எங்களது ஆதரவை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவ முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ 25 லட்சம் வழங்குகிறோம். இந்த சிறிய பங்களிப்பு, தேவையான உதவிகளை வழங்க உதவும் என நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் நாம் செல்லும்போது எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் நம் மக்களுடன் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT