அதர்வாவின் இதயம் முரளி படத்தில் ஃபகத் ஃபாசில்!
இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளது குறித்து...
நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கும் “இதயம் முரளி” திரைப்படத்தில் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் “இதயம் முரளி” திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கின்றார்.
நடிகர்கள் பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை “டான் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
கோடை விடுமுறைகளை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படத்தில் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக, படக்குழுவினர் வியாழக்கிழமை (பிப். 12) சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Popular actor Fahadh Faasil plays a role in the film “Idayam Murali”, starring actor Atharvaa in the lead role.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.