முகப்பு
இந்தியா

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உயிரிழந்ததாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 2:33 AM
பகிர்:

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உயிரிழந்ததாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் வியாழக்கிழமை கூறியதாவது:

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உயிரிழந்து விட்டனர். ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வரும் சில இந்தியர்களை அப்பணியில் இருந்து விரைந்து விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

அரசுக்கு கிடைத்த தகவலின்படி ரஷிய ராணுவப் பணியை விட்டு 12 இந்தியர்கள் விலகி விட்டனர். மேலும் 63 பேர் தங்களை அந்நாட்டு ராணுவத்தில் இருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளனர்.

ரஷியாவில் இறந்தவர்களில் 4 இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. இறந்த மற்றவர்களின் உடல்களைக் கொண்டுவரவும் நிதியுதவி அளிக்கப்படும்.

இது தவிர, உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இழப்பீடு வழங்கப்படும் என்று ரஷிய அரசு தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தில் உள்ள மற்ற இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ரஷிய அரசின் பல்வேறு அதிகாரிகளிடம் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →