முகப்பு
இந்தியா

மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு

மார்ச் 1 - 7 வரையிலான காலகட்டத்தில், வளைகுடா பிராந்தியத்திலிருந்து 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்

Updated On : 8 மார்ச், 2026 at 10:39 AM
தாயகம் திரும்பிய பயணிகள் - AP Photo
பகிர்:

மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா பிராந்தியத்திலிருந்து 52,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், மார்ச் 1 - 7 வரையிலான காலகட்டத்தில், வளைகுடா மற்றும் மேற்காசிய பிராந்தியங்களிலிருந்து 52,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

summary

Over 52,000 Indians traveled safely from Gulf region between March 1-7: MEA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.