மெட்ரோ ரயிலில் பயணித்த முன்னாள் பிரதமர் தேவெ கெளடா படம்: எக்ஸ்
இந்தியா

நீண்டநாள் ஆசை நிறைவேறியது.. தேவெ கெளடா பதிவு

நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்துள்ளார்.

DIN

நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவெ கெளடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவெ கெளடா, தலைநகர் தில்லியில் இன்று (ஆக. 4) பயணம் மேற்கொண்டார். அவருடன் மூத்த அதிகாரிகளும் அரசுத் துறை ஊழியர்களும் பயணம் செய்தனர்.

மெட்ரோ ரயில் பயணத்தின்போது சக பயணிகளிடமும் தேவெ கெளடா கலந்துரையாடினார்.

இது தொடர்பான விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேவெ கெளடா பகிர்ந்துள்ளார். அதில், பல ஆண்டுகளாக தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அது இன்று நிறைவேறியது.

1996 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது, தனது அமைச்சரவைக்குள்ளும் வெளியிலும் இருந்த எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளித்தேன். இறைவன் இதைச் செய்வதற்கு தைரியம் அளித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேவெ கெளடாவின் இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மெட்ரோ திட்டத்துக்கு காரணமாயிருந்ததற்கும் நன்றி தெரிவித்து பதிவிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT