முகப்பு
இந்தியா

அதிகரித்து வரும் ரயில் விபத்துகள்: ‘ரயில்’ அல்ல, ‘ரீல்’ அமைச்சர் -காங். விமர்சனம்

அதிகரித்து வரும் ரயில் விபத்துகள்: ‘ரயில்’வே அமைச்சர் அல்ல; ‘ரீல்’ அமைச்சர் -காங். விமர்சனம்

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 12:02 PM
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீக்கிரையான ரயில் பெட்டிகள்
பகிர்:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே துறை அமைச்சரை விமர்சித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘கோர்பா- விசாகப்பட்டினம் விரைவு ரயிலில்(18517)’ குளிர்சாதன வசதி கொண்ட 3 பெட்டிகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ஆக்ரா ரயில் கோட்டத்தின் ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

ஜூலை 31-ஆம் தேதியன்று மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில் கோட்டத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜார்க்கண்டில் ஜூலை 30-ஆம் தேதியன்று அதிகாலை மும்பை நோக்கி சென்ற ஹௌரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 29-ஆம் தேதியன்று பிகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்’ என்ஜின் குதிராம் போஸ் பூசா ரயில் நிலையத்துக்கும் கர்ப்பூரி கிராம் ரயில் நிலையத்துக்கும் இடையே பயணித்துக் கொண்டிருக்கும்போது, தனியாகக் கழன்று சென்ற சம்பவத்தில் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை விமர்சித்து இன்று(ஆக. 4) வெளியிட்டுள்ள பதிவில், ‘ரயில்’வே அமைச்சர் அல்ல; ‘ரீல்’ அமைச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘ரீல்’ அமைச்சரைப் பொருத்தவரையில், இதுபோன்ற ‘சிறிய’ சம்பவங்கள் ‘பெரிய’ நகரங்களில் தொடர்ந்து ஏற்படும் என்றும் விமர்சித்துப் பதிவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →