வயநாடு பேரிடர்: நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண் ரூ. 1 கோடி நிதியுதவி!
நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்..
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 360-ஐ தாண்டிவிட்டது.
மீளாத்துயரில் ஆழ்ந்துள்ள வயநாட்டு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவியும் ராம் சரணும் இணைந்து கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்கியுள்ளனர்.
முன்னதாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் வழங்கியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை(ஆக. 4) அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, விக்ரம், கமல்ஹாசன், சூர்யா, மம்மூட்டி, துல்கர் சல்மான், பகத் பாசில், மோகன் லால், நஸ்ரியா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராஷ்மிகா மந்தனா உள்பட திரையுலகை சார்ந்த முன்னனி நடிகர் நடிகைகள் பலரும் வயநாடு பேரிடருக்காக நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.