பிரியங்கா காந்தி 
இந்தியா

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க புதிய மசோதா: பிரியங்கா கண்டனம்

அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

PTI

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு புதிய மசோதா கொண்டுவரத் தயாராகி வருவதாகக் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

மகாத்மா காந்தியின் (யங் இந்தியா 1922), மற்றும் ஜவஹர்லால் நேருவின் (மார்ச் 1940) இந்த இரண்டு மேற்கோள்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர்கள் பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

ஆனால், நமது குடிமக்களுக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகிய இரண்டுமே கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடியுள்ளனர்.

சிவில் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நமது தியாதிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான மரபு என்றும் அவர் கூறினார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவது பற்றி எந்த அரசாங்கமும் நினைக்க முடியாது. இன்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

மறுபுறம் பாஜக அரசு டிஜிட்டல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் என அனைத்தையும் ஒடுக்கத் தயாராகி வருகிறது.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்களை நாடு சகித்துக்கொள்ளாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT