ஜெகந்நாத் சர்க்கார் (கோப்புப் படம்) படம்| டிஎன்ஐஇ
இந்தியா

பிரதமர் மோடியால் மட்டுமே வங்கதேச சிறுபான்மையினரைக் காப்பாற்ற முடியும்: பாஜக எம்.பி.

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சியால், இந்தியாவிற்கும் அச்சுறுத்தல் உள்ளதாக ஜெகந்நாத் சர்க்கார் பேச்சு

DIN

வங்க தேசத்தில் சிறுபான்மையினரைக் காப்பாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்களில் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்த பாஜக எம்.பி. ஜெகந்நாத் சர்க்கார், பிரதமர் மோடியால் மட்டுமே வங்கதேசத்தின் சிறுபான்மையினரைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.

பாஜக எம்பி ஜெகந்நாத் கூறியதாவது, "வங்கதேசத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

வங்கதேசத்தில் ராணுவத்தின் ஆதரவு கிடைத்துள்ளதால், நம் நாட்டிற்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் நேர வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க முயற்சி எடுத்தனர்.

எனவே, இப்போது அவர்கள் இருவரையும் பாதுகாப்பது வங்கதேச மக்களின் பொறுப்பே. விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையை பிரதமர் மோடியால் மட்டுமே சமாளித்து, காப்பாற்ற முடியும். வங்கதேசத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் எனக்கு கவலையில்லை.

எனது ஒரே கவலை என்னவென்றால், சிறுபான்மையினரின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் எந்த சேதமும் ஏற்படக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT