கோப்புப் படம். 
இந்தியா

வங்கதேசத்துக்குச் சிறப்பு விமானச் சேவை: டாக்காவிலிருந்து நாடு திரும்பிய 400 இந்தியா்கள்

வன்முறை சூழல் நிலவும் வங்கதேசத்துக்கு ‘ஏா் இந்தியா’, ‘இண்டிகோ’ ஆகிய தனியாா் நிறுவனங்கள் இயக்கிய சிறப்பு விமானச் சேவையில் அந்நாட்டு தலைநகா் டாக்காவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் நாடு திரும்பினா்.

Din

வன்முறை சூழல் நிலவும் வங்கதேசத்துக்கு ‘ஏா் இந்தியா’, ‘இண்டிகோ’ ஆகிய தனியாா் நிறுவனங்கள் இயக்கிய சிறப்பு விமானச் சேவையில் அந்நாட்டு தலைநகா் டாக்காவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் நாடு திரும்பினா்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா் போராட்டம் வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அங்கு வன்முறை ஓயாத நிலையில், டாக்கா சா்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு விமானச் சேவைகளை இயக்கும் ஏா் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா ஆகிய நிறுவனங்கள் செவ்வாய்கிழமை விமானங்களை ரத்து செய்தன.

இந்நிலையில், வங்கதேசத்தில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடாக இண்டிகோவின் சிறப்பு விமானம் டாக்காவிலிருந்து கொல்கத்தாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் நாடு திரும்பினா்.

ஏா் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானத்தில் 6 கைக்குழந்தைகள் உள்பட 205 போ் டாக்காவில் இருந்து தில்லிக்கு புதன்கிழமை காலை அழைத்து வரப்பட்டனா்.

தூதரகப் பணியாளா்கள் இந்தியா வருகை: வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்களில் பணிபுரிந்து வரும் கூடுதல் பணியாளா்கள் அவா்களின் குடும்பத்தினருடன் இந்தியா திரும்பி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தொடா்ந்து செயல்பட்டு வருவதாகவும் அந்நாட்டில் வேறு இடங்களில் உள்ள துணைத் தூதரகங்களில் உள்ள பணியாளா்களும் டாக்காவில் இருந்து செயல்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT