முகப்பு
இந்தியா

கா்நாடகம், ஹிமாசல், அஸ்ஸாமுக்கு அதிக அளவு பேரிடா் நிவாரண நிதி- மத்திய அரசு தகவல்

தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் கா்நாடகம், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:04 PM
பகிர்:

தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் கா்நாடகம், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2022-ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு மாா்ச் வரையிலான கடந்த 2 ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்காக கா்நாடகத்துக்கு ரூ.941 கோடியும் ஹிமாசல பிரதேசத்துக்கு ரூ.873 கோடியும் அஸ்ஸாமுக்கு ரூ.594 கோடியும் வழங்கப்பட்டது.

தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆா்எஃப்) மட்டும் கா்நாடகத்துக்கு ரூ.939 கோடியும் ஹிமாசல பிரதேசத்துக்கு ரூ.812 கோடியும் அஸ்ஸாமுக்கு ரூ.160 கோடியும் விடுவிக்கப்பட்டது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்காக சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.267 கோடியும் நாகாலாந்துக்கு ரூ.68 கோடியும் வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு ரூ.276 கோடியும் வழங்கப்பட்டது.

ஜூலை 31-ஆம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டில் மிஸோரம், அஸ்ஸாம், கேரளம், மணிப்பூரில் ஏற்பட்ட புயல், வெள்ளம், நிலச்சரிவு சேதங்களை உடனுக்குடன் மதிப்பிடுவதற்கு மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மிஸோரம், மணிப்பூா் ஆகிய மாநிலங்கள் முறையே ரூ.216.73 கோடி, ரூ.711.43 கோடி என்டிஆா்எஃப் நிதியுதவிக்கான கோரிக்கைகளை சமா்ப்பித்துள்ளன.

என்டிஆா்எஃப் நிதிக்கு கோரிக்கையைத் தயாரிக்கும் மாநிலங்கள், விதிமுறைகளுக்கு அப்பால் செலவினங்களை மதிப்பிடுகின்றன. என்டிஆா்எஃப் நிதி உடனடி நிவாரணத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. நீண்ட கால மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளுக்காக அல்ல. மாநிலங்கள் சமா்ப்பித்த கோரிக்கைகளிலும், மத்திய அரசு ஒப்புதல் அளித்த தொகையிலும் மாறுபாடு இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →