திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா 
இந்தியா

வினேஷ் போகத்தை பாஜகவினர் இப்போது புகழ்ந்து பேசுவார்கள்: மஹுவா மொய்த்ரா

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்போது வினேஷ் போகத்தை புகழ்ந்து பேசுவார்கள் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

DIN

வினேஷ் போகத்தை தெருவில் இழுத்துச் சென்ற பாஜக அரசு இப்போது அவரை புகழ்ந்து பேசுவார்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு நுழைந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசுகையில், 'வினேஷ் போகத்தை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று நேற்றே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தேன்.

வினேஷ் போகத்தை பாஜக அரசு, தில்லி காவல்துறை, உள்துறை அமைச்சகம் தெருவில் இழுத்துச் சென்ற நிலையில், இன்று பிரதமர் மோடி, விளையாட்டு அமைச்சகம், பாஜக தலைவர்கள் அனைவரும் இன்று வீதிக்கு வந்து 'வினேஷ் போகத் இந்தியாவின் மகள்' என்று பேசுவார்கள்.

நாம் அவருக்குத் துணையாக நின்று, அவருக்காக நீதி கேட்டோம். அவர் இன்று நாட்டிற்கு பெரும் புகழ் சேர்த்திருக்கிறார். எதிர்த்துப் போராடினால் வெற்றி பெறலாம் என இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வெற்றியின் மூலமாக உணர்த்தியுள்ளார்' என்றார்.

29 வயதான வினேஷ் போகத், இந்தியாவுக்காக காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் கடந்தாண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

அப்போது, போராட்டத்தை தடுப்பதற்காக வினேஷ்போகத்தை காவல்துறையினர் சாலைகளில் இழுத்துச் சென்ற புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தில் வைரலானது. எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

SCROLL FOR NEXT