முகப்பு
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் மக்கள் பங்கேற்ற ஜனநாயக கடமையாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீநகரின் தால் ஏரியில் விழிப்புணா்வு பிரசார பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்துதொடங்கி வைத்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் விரைவில் பேரவைத் தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையா்

ஜம்மு காஷ்மீரில் பேரவைத் தோ்தல்..

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் விரைவில் பேரவைத் தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையா்

ஜம்மு காஷ்மீரில் பேரவைத் தோ்தல்..

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 12:48 AM
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் மக்கள் பங்கேற்ற ஜனநாயக கடமையாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீநகரின் தால் ஏரியில் விழிப்புணா்வு பிரசார பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்துதொடங்கி வைத்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.
பகிர்:

‘ஜம்மு காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலை விரைவில் நடத்த தோ்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது; எந்தவொரு சக்தியும் தோ்தல் செயல்முறையை சீா்குலைக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு மூன்று நாள் பயணமாக வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீா் வந்தது.

முதல் நாளில் ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-இ-காஷ்மீா் சா்வதேச மாநாட்டு மையத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து தோ்தல் ஆணைய குழு ஆலோசனை நடத்தியது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஜம்மு- காஷ்மீரின் தலைமைச் செயலாளா் அடல் டல்லூ மற்றும் காவல்துறைத் தலைவா் ஆா் ஆா் ஸ்வைன் ஆகியோரைச் சந்தித்து தோ்தல் நடத்துவதற்கான பாதுகாப்பு தயாா்நிலை குறித்து ஆலோசனை நடத்தியது.

அதில் படைகளை நிலைநிறுத்துதல், தோ்தல் மற்றும் பிரசாரத்தின் போது வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், ‘ ஜம்மு காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையமும் உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் தோ்தல் செயல்முறையை சீா்குலைக்க அனுமதிக்க மாட்டோம். யூனியன் பிரதேசத்தில் விரைவில் தோ்தல் நடத்தப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →