மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ANI
இந்தியா

தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு சட்டம் இயற்றப்படாது: மத்திய அரசு

தோ்தல் நிதிப் பத்திர விவகாரம்...

Din

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தோ்தல் நிதிப் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அதற்கென புதிய சட்டத்தை இயற்றும் எண்ணமில்லை என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேலும், தோ்தல் ஆணையம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்த எவ்வித திட்டமும் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் அரசமைப்பை மீறுவதாக கூறி உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அதை ரத்து செய்து தீா்ப்பளித்தது. இதையடுத்து, இந்த திட்டத்துக்கு மாற்றாக வேறு முன்னெடுப்புகளை அரசு அறிமுகப்படுத்தவுள்ளதா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துபூா்வ பதிலில்,‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பாக புதிய சட்டங்கள் இயற்றும் எண்ணமில்லை’ என்றாா்.

தோ்தல் நிதிப்பத்திரங்களை வாங்கியது யாா், அந்தப் பத்திரங்களின் மூலம் எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன ஆகிய விவரங்களை, தோ்தல் நிதிப் பத்திரங்களை விநியோகித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்திருந்தது. இந்த தகவல்களை தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடக்கோரி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து அவை வெளியிடப்பட்டன.

அதேபோல் இந்தத் திட்டம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பாா்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய 2 மனுக்களை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT