ராஜ்காட்டில் மணீஷ் சிசோடியா 
இந்தியா

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மணீஷ் சிசோடியா அஞ்சலி!

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

PTI

கலால் கொள்கை வழக்கில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மணீஷ் சிசோடியா ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தில்லி கலால் கொள்ளை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா 17 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து நேற்று மாலை வெளியே வந்தார்.

திகார் சிறைக்கு வெளியே மணீஷ் சிசோடியாவை வரவேற்க அமைச்சர் அதிஷி, எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெளியே வந்த சிசோடியா, அரசியலமைப்பின் அதிகாரம் மற்றும் ஜனநாயகத்தினால் தான் ஜாமீன் பெற்றதாகவும், அதே அதிகாரம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் விடுதலையை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் சிசோடியா வழிபாடு செய்தார், பின்னர் அவர் மகாத்மா காந்தியின் நினைவிடத்தை அடைந்தார். அவருடன் சஞ்சய் சிங், அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் உள்பட பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் இருந்தனர்.

அனுமன் கோயில் தரிசனத்திற்குப் பிறகு சிசோடியா,

அனுமன் தில்லி மக்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கட்டும். அனுமனின் ஆசியுடன் முதல்வர் கேஜரிவாலும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சிசோடியா டிடியு மார்க்கில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்குச் சென்று கட்சி தொண்டர்கள் மற்றம் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊடுருவல்காரா்களிடம் பரிவு காட்டுகிறது காங்கிரஸ், ஆா்ஜேடி: பிரதமா் மோடி

பாகிஸ்தான், சீனா ரகசிய அணு ஆயுத சோதனை: அமெரிக்க அதிபா் டிரம்ப் தகவல்

மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT