துங்கபத்ரா அணை 
இந்தியா

துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

DIN

கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

விஜயநகரா மாவட்டத்தில் ஹோசபேட் அருகே அமைந்துள்ள அணையின் 19-ஆம் எண் கதவு சனிக்கிழமை(ஆக. 11) உடைந்து அதன் வழியே அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. சனிக்கிழமை இரவு 11 மணியளவில் 19வது கதவின் சங்கிலி இணைப்பு உடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுவதால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து எப்போது வேண்டுமானாலும் விநாடிக்கு 3 லட்சம் கன அடியை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கோப்பல், விஜயநகரா, பெல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 33 மதகுகளும் திறக்கப்பட்டு அவற்றின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உடைந்துள்ள கதவினை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவு தண்ணீர் வெளியேறுவதால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT