சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு இன்று (ஆக. 11) விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பெட்டிகளில் நிலக்கரி மட்டுமே இருந்ததால் இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் அன்பாரா பகுதியிலிருந்து ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையிலுள்ள காரியார் பகுதிக்கு சரக்கு ரயில் இன்று சென்றது.
நிலக்கரி ஏற்றிச் சென்ற இந்த ரயிலின் இரு பெட்டிகள், வாரணாசி மாவட்டத்திற்குட்பட்ட சக்திநகர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.