கோப்புப் படம் 
இந்தியா

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சில்லறை பணவீக்கம்!

நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் குறைந்துள்ளது.

DIN

நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் குறைந்துள்ளதாக அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் சில்லறை பணவீக்கம் மே 2024-ல் 4.75% ஆக இருந்து ஜூன் மாதத்தில் 5.08% ஆக உயர்ந்துள்ளதாக திட்ட அமலாக்கத் தரவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகளின்படி, 2024 ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.54% ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 4.10% ஆகவும் நகர்ப்புறங்களில் 2.98% ஆகவும் குறைந்துள்ளது.

ஜூலை 2023 இல் நகர்ப்புற பணவீக்கம் 7.20% ஆகவும், கிராமப்புற பணவீக்கம் 7.63% ஆகவும் இருந்தது.

ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தை 4% ஆக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூலை மாதத்தில் இலக்கை விட குறைந்துள்ளது.

அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு தரவுகளின்படி, ஜூலை மாதத்தின் உணவுப் பொருள்களுக்கான சில்லறை பணவீக்கம் 5.42% ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 5.89% ஆகவும், நகர்ப்புறங்களில் 4.63% ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

கூலி ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT