மருத்துவ மாணவி கொலை -நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் படம் | பிடிஐ
இந்தியா

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: மருத்துவக் கல்லூரி தலைவர் ராஜிநாமா

மருத்துவர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி தலைவர் ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவ மாணவர்களின் போராட்டதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இளநிலை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி தலைவர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்ய 12 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்த நிலையில், இன்று காலை அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனை மட்டுமல்லாமல், மாநிலம் தழுவிய போராட்டம் வலுவடைந்திருக்கும் நிலையில், மருத்துவக் கல்லூரி தலைவர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

பெண் மருத்துவர் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து மருத்துவமனையில் இன்று அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளும் செயல்படாது என்று அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியது.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த நான்கு நாள்களாக மருத்துவமனை இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் எவ்வித குறுக்கீடுகளுமின்றி முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தவும் அரசுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 48 மணி நேரத்தில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்திருந்தது.

மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT