அஜித் பவார் (கோப்புப்படம்) Din
இந்தியா

வக்ஃப் மசோதா: முஸ்லிம்களுக்கு அநீதி நடக்க விடமாட்டோம் -அஜித் பவார்

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து அஜித் பவாரின் கருத்து..

DIN

சிறுபான்மையினருக்கு அநீதி நடக்க விடமாட்டோம் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஜித் பவார் பேசியதாவது:

“வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிசீலனையின் போது மக்களின் குறைகளை கேட்போம். சிறுபான்மையினருக்கு அநீதி நடக்க விடமாட்டோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீர்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடர்பான வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய இந்த குழுவின் அறிக்கை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சமர்பிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

வேலூா், ராணிப்பேட்டைக்கு இன்று துணை முதல்வா் வருகை!

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மூத்த பெண் நக்ஸல் சரண்!

கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு: முதல்வா் நிதியுதவி

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT