அமர்நாத் பனி லிங்கம் 
இந்தியா

அமர்நாத் யாத்திரை 2-ஆவது நாளாக முடக்கம்!

யாத்திரை செல்லும் வழித்தடத்தில் சாலைப் பணிகள்...

DIN

அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும்(ஆக. 13) யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்புப் படை வீரர்கள், அடிப்படை முகாம்கள், சமூக சமையல் கூடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் யாத்ரீகரக்ள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ததைத் தொடர்ந்து, அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்யச் செல்லும் வழித்தடத்தில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களிலும் யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலைத் தரிசிக்க 52 நாள்கள் நடைபெறும் யாத்திரையானது ஆகஸ்ட் 19ஆம் தேதி ஷ்ரவண பூர்ணிமா, ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை! நாளை முதல் தீவிரமடையும்!!

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

நாகூரில் தந்தையைக் கொன்ற மகன் கைது!

பைக்கில் சென்ற பெண்ணின் தங்கச் செயினைப் பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்னா!

SCROLL FOR NEXT