எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக முடக்கம்!
மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக முடக்கப்பட்டிருப்பது பற்றி...
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் முடங்கியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மக்களவையை முடக்கினர்.
இந்த நிலையில், நேற்றுமுதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இன்று காலையும் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.
Lok Sabha proceeding adjourn for sixth consecutive day!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.