எதிர்க்கட்சி அமளியால் மக்களவை இன்றும் முடங்கியது!
எதிர்க்கட்சி அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
மக்களவையில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.
தில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க தொடர்ந்து இரண்டாவது வாரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் ’தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா’ மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, மசோதா குறித்து விவாதம் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த சூழலில், இன்று அவை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதை தொடர்ந்து, கேள்வி நேரத்தைத் தொடர அனுமதிக்குமாறு அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை நடவடிக்கையை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
Lok Sabha stalled again today due to opposition uproar!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.