தொடரும் அமளி! மக்களவை பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியைத் தொடர்ந்து மக்களவை பிற்பகல் 2 வரை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
மக்களவையில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.
தில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க தொடர்ந்து இரண்டாவது வாரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
இன்று அவை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதை தொடர்ந்து, கேள்வி நேரத்தைத் தொடர அனுமதிக்குமாறு அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
Advertisement
Advertisement
ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கையை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
முன்னதாக, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
Uproar continues - Lok Sabha adjourned until 2 PM!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.