நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
5-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பற்றி...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் தொடா்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து 5-ம் நாளாக இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கின. அவை தொடங்கியதுமே நீட் வினாத்தாள் கசிவு, தில்லியில் இளைஞர்கள் போராட்டம் மற்றும் இளைஞர்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இதனால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
தொடர்ந்து மீண்டும் அவை பகல் 12 மணிக்கு கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து 5 நாள்களும் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Monsoon session: Lok Sabha, Rajya sabha adjourned till 12 noon today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.