அமித் ஷா பதிலளிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளுமே ஒத்திவைக்கப்பட்டது குறித்து...
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை என இரு அவைகளுமே ஒத்திவைக்கப்பட்டன.
தில்லியில் ஜூலை 20 ஆம் தேதியில் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று மழையிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, மக்களவையை இன்று பகல் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, மக்களவை செயல்படுவதற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.
Advertisement
Advertisement
மேலும், அவர் கூறியதாவது, தயவுசெய்து அவை செயல்பட உறுப்பினர்கள் அனுமதிக்க வேண்டும். நீங்கள் விரும்பும் அனைத்து விவகாரங்களும் நாம் விவாதிப்போம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் பகல் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.
Opposition protests over police action against students force Lok Sabha adjournment till 2 PM
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.