FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது பற்றி...

மக்களவை - Sansad
பகிர்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

இன்றைய மக்களவை கூட்டத்தொடருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில், அவை கூடியவுடன் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சில நிமிடங்களில் அவை நடவடிக்கையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதனிடையே, மாநிலங்களவை கூட்டத்தொடர் பகல் 12 மணி வரை நடைபெற்ற நிலையில், அவை நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் முடித்துவைத்தார்.

தொடர்ந்து, இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டு, மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளிலிருந்தே பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வியெழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு அனுமதி அளித்தது யார்? எனவும், ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வியெழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தொடரில் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு திருத்த மசோதா, தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா, பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா உள்பட 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், இந்தியப் புள்ளிவிவரக் கழக மசோதாவைத் தவிர, மற்ற 11 மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

summary

The monsoon session of Parliament concludes! 11 bills passed in both houses!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments