மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு: காவிரி விவகாரம் விவாதிக்கப்படுமா? திமுக நோட்டீஸ்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் (ஆக. 13) நிறைவடைவது குறித்து...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் (ஆக. 13) நிறைவடைகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வியெழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு அனுமதி அளித்தது யார்? எனவும், ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வியெழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய பதிலளிக்க வேண்டும் எனக் கோரினர். இதனையடுத்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விரிவான விவாதம் நடத்த அமித் ஷா அழைப்பு விடுத்த நிலையில், அதனை ஏற்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவிடமிருந்து நேரடி பதில்தான் வேண்டுமே தவிர, உரைகள் தேவையில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படுமா? என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிய வரும்.
இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
Monsoon Session Of Parliament Ends Today: Debate Or Deadlock On Final Day?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.