ராஜஸ்தானில் நடந்த விபரீதம் 
இந்தியா

ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கணவர் கைது

ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில், தனது விருப்பத்துக்கு மாறாக தங்கை வீட்டுக்குச் சென்ற மனைவியை, கணவர் பைக்கில் கட்டி இழுத்துச் செல்லும் விடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரேமா ராம் மேக்வால் (35) கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தம்பதிக்கு 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாகவும், இந்த வெட்கக்கேடான சம்பவம் பச்சௌடி கிராமத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் பிரேமா ராம் மிகவும் கொடுமைக்காரர் என்றும், போதைக்கு அடிமையான இவர், தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போது வெளியாகியிருக்கும் விடியோ, ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது என்றும், கடநத் சனிக்கிழமை, பிரேமா ராம் தனது நண்பருடன் போதையில் சண்டையிட்டதால், ஆத்திரத்தில் அந்த நண்பர் இந்த விடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விடியோவில், பிரேமா ராம் தனது பைக்கில், மனைவியை கட்டி இழுத்துச் செல்கிறார். மணல் பாங்கான சாலையில், பெண் ஒருவர் பைக்கில் கட்டி இழுத்துச் செல்லப்படும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கும் விதத்தில் உள்ளது.

பத்து மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமானது முதல் பிரேமா ராம் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். மனைவி, கடந்த மாதம் தனது சகோதரி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். ஆனால் அவரை செல்லக்கூடாது என்று பிரேமா தடுத்து, அவர் சென்றதால், ஆத்திரமடைந்துள்ளார். அங்குச் சென்று தனது மனைவியை பைக்கில் கட்டி வீடு வரை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். அங்கிருந்த கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவியின் கட்டை அவிழ்த்திருக்கிறார். இது குறித்து அப்போது காவல்நிலையத்தில் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இதனை பிரேமா ராமின் நண்பர் விடியோ பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அது வெளியாகி, கைது நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT