மோசமான வானிலை காரணமாக தில்லி - நரிட்டா விமான சேவை ரத்து: ஏர் இந்தியா
மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக ஏர் இந்தியா தில்லியிலிருந்து ஜப்பானின் நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுதில்லி: மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக ஏர் இந்தியா, தில்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுதில்லி - நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டோக்கியோவில் மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக புதுதில்லி - நரிட்டா - புதுதில்லி வழித்தடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஏஐ 306 மற்றும் ஏஐ 307 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.