FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: ஐஎம்ஏ

நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) வியாழக்கிழமை அறிவித்தது.

16 ஆகஸ்ட் 2024, 6:17 am IST
பகிர்:

புது தில்லி, ஆக. 15: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை (ஆக.17) நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 18-ஆம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும்.

அத்யாவசிய மருத்துவ சேவைகள் மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் நிவீன மருத்துவ சேவைகள் ஏதும் செயல்படாது. திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகள் நடத்தப்படாது. மருத்துவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments