கோப்புப் படம் 
இந்தியா

அஸ்ஸாம்: 19 இடங்களில் வெடிகுண்டுகள்?

தடை செய்யப்பட்ட அமைப்பு எச்சரிக்கை

இணையதளச் செய்திப் பிரிவு

அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தடை செய்யப்பட்ட அமைப்பு கூறியுள்ளது.

அஸ்ஸாமில் வெவ்வேறு இடங்களில் 19 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக, தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவான யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அஸ்ஸாம் (உல்ஃபா) தெரிவித்துள்ளது.

வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகக் கூறும் 19 இடங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது. அவற்றில், குவஹாட்டியில் மட்டும் டிஸ்பூர் லாஸ்ட் கேட்டில் உள்பட 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

கூடுதல் தகவல்களாக, உல்ஃபா மற்றும் நாகாலாந்தின் என்எஸ்சிஎன் - யுங் ஆங் பிரிவு ஆகிய இரண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் முழு வேலை நிறுத்தத்திற்காக அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து, அருணாசல பிரதேசத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அவர்கள் மக்களை வலியுறுத்தினர்.

வடகிழக்கில் உள்ள இந்த இரண்டு தீவிரவாதக் குழுக்களும், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை புறக்கணிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT