ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? என்கிற கேள்விக்கு தில்லி அமைச்சர் அதிஷி பதிலளித்துள்ளார்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, "பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், எங்கள் கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் ஆகியோர் ஹரியாணாவில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளனர். அவர்கள் பெரும் கூட்டத்தைக் கண்டுள்ளனர்.
கேஜரிவால், ஹரியாணாவின் மகன். இதனால், மக்கள் அவருடன் தொடர்பு வைத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் முழு பலத்துடன் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று உறுதிபட கூறினார்.
தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, "தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முடிவு எடுக்கப்படும். அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறோம். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.