மின்னல் பாய்ந்து 3 பேர் பலி 
இந்தியா

சத்தீஸ்கரில் மின்னல் பாய்ந்து 3 பெண்கள் பலி, 7 பேர் காயம்!

காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவியை வழங்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

பிடிஐ

சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்ததில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

பத்தல்காவ்ன் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்தமுடா கிராமத்தில்

மின்னல் பாய்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.மேலும் பாக்பஹார் காவல் நிலைய எல்லையில் மற்றொரு பெண் உயிரிழந்தார்.

பலியானவர்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மின்னல் பாய்ந்தது. இறந்தவர்கள் ஷரத்தா யாதவ் (35) ராக்கி பைங்கரா (20), மற்றும் மின்ஜ் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஏழு பேரில், மூவர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், மேலும் நான்கு பேர் பதல்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களுக்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய் வருத்தம் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவியை வழங்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜஷ்பூர் உள்பட ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய சர்குஜா பிரிவில் மழைக்காலத்தில் மின்னல் தாக்குதலால் ஏற்படும் மரணங்கள் அடிக்கடி பதிவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜயகாந்தை அரசியல் குரு என விஜய் அறிவித்தால்...! - பிரேமலதா பேட்டி

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

சாந்தம்... இவானா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

தூக்கம் தொலைதூரமா? இரவில் ஏலக்காய் போதும்..!

SCROLL FOR NEXT