சம்பயி சோரன்(கோப்புப்படம்) 
இந்தியா

பாஜகவில் இணைகிறேனா? சம்பயி சோரன் விளக்கம்

பாஜகவில் இணைவதாக வெளியான ஊகங்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பதிலளித்துள்ளார்.

DIN

பாஜகவில் இணைவதாக வெளியான ஊகங்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பதிலளித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சம்பயி சோரன் பாஜகவில் இணையலாம் என்று செய்திகள் இன்று வெளியாகியிருந்தன.

இதனிடையே ஜாம்ஷெட்பூருக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுபோன்ற ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

நான் இருக்கும் இடத்தில் இருக்கிறேன். ஹெம்ப்ரோம் தான் என்னைச் சந்தித்தார். அப்போது நாங்கள் வழக்கமான விவாதங்களைக் கொண்டிருந்தோம் என்றார்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஜேஎம்எம் எம்எல்ஏ ஹெம்ப்ரோம் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் ஹெம்ப்ரோம்-ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பயி சோரன் சந்திப்பு ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

SCROLL FOR NEXT