தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய டாக்ஸி டிரைவர் எக்ஸ் தளப் பதிவு
இந்தியா

தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய டாக்ஸி டிரைவர், 4 காவல்துறையினர்!

அடல் சேது பாலத்தில் இருந்து குதிக்க முயன்றவரின் தலைமுடியைப் பிடித்து காப்பாற்றிய சம்பவம்

DIN

மும்பையில் அடல் சேது பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மும்பையில் தெற்கு மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் அடல் சேது கடல் பாலத்திற்கு, ரீமா முகேஷ் படேல் என்ற பெண், ஆக. 16, வெள்ளிக்கிழமை, இரவு 7 மணியளவில் ஒரு டாக்ஸியில் சென்றுள்ளார்.

பாலத்தை அடைந்த பின்னர், பாலத்தின் பக்கவாட்டில் இருக்கும் தடுப்புக்கு அருகே சென்று, குதிக்க முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கீழே குதித்து விழவிருந்த ரீமாவின் தலைமுடியைப் பிடித்துள்ளார், டாக்ஸி டிரைவர். இருப்பினும், அவரால் ரீமாவை, மேலே தூக்க முடியவில்லை.

அதே நேரத்தில், அப்பகுதி வழியே வந்த காவல்துறையினர் நான்கு பேரும் சேர்ந்து, ரீமாவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இறுதியாக, காவலர்களும் டாக்ஸி டிரைவரும் ஒன்றாக சேர்ந்து, ரீமாவை பாலத்தின் மேற்பகுதிக்கு தூக்கி, காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை, மும்பை காவல் ஆணையரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரீமாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT