பதவிநீக்கம் செய்யப்பட்ட கேப்ரியல் வாலங்க் மற்றும் சார்லஸ் மார்ங்கர் 
இந்தியா

மேகாலயாவில் 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்யப்பட்ட இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்!

மேகாலயாவில் இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

DIN

மேகாலயாவில் இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மேகாலயா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்வதாக உத்தரவிட்டு மேகாலயா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 16) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மவாத்தி தொகுதி எம்எல்ஏ சார்லஸ் மார்ங்கர் மற்றும் நாங்ஸ்டாய்ன் தொகுதி எம்எல்ஏ கேப்ரியல் வாலங்க் ஆகியோர் மறு உத்தரவு வரும் வரை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’கட்சியின் பிளாக் கமிட்டியின் சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையிலும், மேகாலயா ஜனநாயகக் கூட்டணி அரசுடன் உங்களுக்கு உள்ள தொடர்பின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அப்படியான முடிவுகள் எதுவும் தற்போதுவரை எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT