முகப்பு
இந்தியா

மருத்துவர்களை வாழவிடுங்கள்..! மருத்துவ சங்கத் தலைவர் உருக்கமான கடிதம்

இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐஎம்ஏ) தேசியத் தலைவர் மருத்துவர் ஆர்.வி. அசோகன் உருக்கமான கடிதம்

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 10:41 PM
மருத்துவர்கள் போராட்டம் | பாட்னா - படம் | பிடிஐ
பகிர்:
Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:09 PM

இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐஎம்ஏ) தேசியத் தலைவர் மருத்துவர் ஆர்.வி. அசோகன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலையைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மருத்துவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தை சுட்டிக்காட்டி அதில் கூறப்பட்டுள்ளதாவது, “நாம் ஒரே தேசமாக ஒன்றுதிரண்டு, அந்த பெண் மருத்துவர் உயிரிழந்தாலும் அவர் மாய்ந்துவிட நாம் அனுமதிக்கவில்லை. மருத்துவர் கொலையின் எதிரொலியாக நாடெங்கிலும் ஆத்திரம், கோபம், உதவி செய்ய இயலாத கையறு நிலை என பல்வேறு உணர்வுகள் நிலவுகின்றன.

Advertisement

- படம் | பிடிஐ
Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:37 PM

இந்திய மக்கள் மருத்துவர்களை சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர். அந்த பெண் மருத்துவருக்கு 36 மணி நேரம் பணி.. சம்பவத்தன்று அவர் நள்ளிரவு 2 மணிக்குதான் உணவருந்தியுள்ளார்.. அதன்பின் கருத்தரங்கில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.. அவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோரின் ஒரே மகள், இப்போது கோடிக்கணக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுவதற்கு அவர் காரணமாக அமைந்துவிட்டார்.

ஒவ்வொரு இந்திய குடும்பமும் தங்கள் மகளை இழந்து தவிப்பதாய் உணருகின்றனர். தாய்மார்கள் கொதிப்படைந்துள்ளதையும்... தந்தைமார்கள் மனதிற்குள் அழுவதும் தெரிகிறது...

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:52 PM

உறைவிட மருத்துவர்கள் முதலில் போராட்டத்தில் குதித்தனர். கொலை நிகழ்ந்தபின் அடுத்த ஏழு நாள்கள் அவர்கள் உறக்கத்தை தொலைத்து போராடுகின்றனர். வாரத்துக்கு 100 மணி நேரம் வேலைப்பளு அவர்களுக்கு... அவர்களது போராட்ட குணமே நாட்டின் ஒரே நம்பிக்கையக விளங்குகிறது...

இந்திய விடுதலைப் போராட்டத் தீயில் இந்திய மருத்துவர்கள் சங்க(ஐஎம்ஏ) பிறப்பெடுத்தது... அந்த தீ இன்றுவரை பற்றி எரிகிறது.. இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் வேரூன்றி உள்ளது ஐஎம்ஏ...

மருத்துவர்கள் அநாதைகள் அல்ல.. ஒவ்வொருவரும் மருத்துவர்களைத் தத்தெடுத்திருப்பதை காண முடிகிறது...

சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன... இந்தியா ஒரு இளம் நாடு... இங்கே படிப்பறிவில்லா சட்டங்கள் அமல்படுத்தப்படலாம்... புதியதாய் அமல்படுத்தப்பட்டுள்ள பாரதிய நியாய் சன்ஹித் சட்டம் முழுமையானதாக இல்லை... ஆனால், இதை அரசு ஏற்றுக்கொள்ளாது...

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:42 PM

நாங்கள்(மருத்துவர்கள்) வாழும் உரிமையை கோருகிறோம்... மருத்துவர்கள் வாழட்டும்.. மருத்துவர்களாகிய நாங்கள் போராடுவதற்காக வாழ்கிறோம்..

மேற்கண்டவாறு மருத்துவர்களின் மனக்குமுறல்களை கடிதம் மூலம் வெளிப்படுத்தியதுடன், இந்திய மக்களுக்கும், இந்திய மருத்துவர்கள் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஐஎம்ஏ தேசியத் தலைவர் மருத்துவர் ஆர்.வி. அசோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.