உத்தரப் பிரதேசத்தில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரால், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தலித் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், செவிலியர் ஆக. 17, சனிக்கிழமை, இரவு 7 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செவிலியரை மருத்துவர் ஷாநவாஸ் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவரை மருத்துவர் அறைக்கு செல்லுமாறு, மற்றொரு செவிலியரான மெஹ்னாஸ் கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவரின் அறைக்கு செல்ல மறுத்த செவிலியரை, மெஹ்னாஸும் மருத்துவமனையின் ஊழியர் ஜுனைத் என்பவரும் வலுக்கட்டாயமாக, மாடிக்கு அழைத்துச் சென்று, ஓர் அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அறைக்குள் நுழைந்த மருத்துவர் ஷாநிவாஸ், செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவிலியரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், மருத்துவர் ஷாநிவாஸ், செவிலியர் மெஹ்னாஸ், ஊழியர் ஜுனைத் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல் கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று பெறுவதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சுகாதாரத் துறைக் குழு அறிவுறுத்தலின்பேரில், மருத்துவமனை மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.