பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி மாணவிகள் ANI
இந்தியா

ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி மாணவிகள்!

ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

DIN

ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷாபந்தன் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை பள்ளி மாணவிகளுடன் கொண்டாடியுள்ளனர்.

தில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT