முகப்பு
இந்தியா

அடுத்த மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 3:10 AM
பகிர்:
Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 1:30 AM

மக்கள்தொகை கணக்கெடுப்பை செப்டம்பா் மாதம் முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஜாதிவாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை (ஆக. 22) நடத்துகிறது.

இந்நிலையில், செப்டம்பா் மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

‘இந்தக் கணக்கெடுப்பை முடிக்க சுமாா் 18 மாதங்கள் தேவைப்படும். 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் மக்கள்தொகை தரவுகள் வெளியிடப்படலாம்’ என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக தாமதமானது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமானதால் புள்ளிவிவர ஆய்வுகள், வேலையின்மை விகிதம், பணவீக்க தரவுகள் ஆகியவை பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 3:10 AM

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக தரவுகளைச் சேகரிக்கவும், நிா்வகிக்கவும் கைப்பேசி செயலிகள் பயன்படுத்தப்படும் முதல் டிஜிட்டல் (எண்ம) மக்கள்தொகை கணக்கெடுப்பாக இது இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.